RSS

27/03/2014

கண்காட்சி,EXHIBITION

CREATIVA
Europe's leading exhibition for creative design.

                        
                        **  **  **  **  **  **  **
ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் பெரிய கண்காட்சி. 
இந்த வருடம் இம்மாதம் 19-லிருந்து -23 வரை நடைபெற்றது.  DORTMUND டோர்ட்முன்ட் என்ற நகரத்தில் நடைபெற்றது. இவ்வருடம்தான் எனக்கு போகமுடிந்தது.
கடந்த சனிக்கிழமை நானும், என் ஜேர்மனிய நண்பியும்,
அவரின் மகளுமாக சென்றிருந்தோம். காலை 9 மணிக்கு
டிக்கெட் எடுத்து, உள்ளே சென்று பார்த்து முடிக்க மாலை 6  மணியானது.முழுக்க கைவினைப்பொருட்களே கண்காட்சியில். 
               கற்பகதருவான பனைமரத்திலிருந்தும்,தென்னையிலிருந்தும் 
               கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த அலங்காரப்பொருட்கள்.
                                      இவைகள் மரத்தினாலான நகைகள்               
           இவைகள் Acrylic Beads, Plastic Beads & Resin Beads.    
 
ஒரிகாமி 
 QUILLING
  
  பேப்பர் மனிதர்கள்
 அங்கு நிறைய பயிற்சிப்பட்டறைகள் (WORK SHOPS)  நடாத்தினார்கள்.
கைவேலை கற்றுக்கொடுத்தார்கள். கார்ட் செய்வது, பெயிண்டிங், தையல், துணியில் பூ போடுவது, சித்திரம், க்விலிங், ஒரிகாமி, பேப்பர் க்ராப்ட் துணியில் பொம்மை செய்வது, கேக் அலங்காரம் இப்படி நிறைய.
                                           கைத்தறி           
ஆனால் எல்லா இடத்திலும் வரிசையில் காத்திருக்கவேண்டும். 
கூடுதலாக card making, paper craft ல் இடம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.
கைவேலைக்கான அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டன. இங்கு வெளிக்கடைகளில் வாங்குவதை விட, விலை அதிகமாக இருந்தது. எங்க கூட வந்த நீனாவுக்கு (நண்பியின் மகள் ) க்ராப்ட் செய்வதில் மிகுந்த ஆர்வம்.அனேகமான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார்.
                        இவைகள் நான் செய்த ஒரிகாமி
 
                          கேக் & சாக்லேட் அலங்காரம்
 படங்கள் அதிகமா போச்சு.அஜஸ்ட் பண்ணிக்குங்க.
***************************************************
இம்மாதம் வந்த சகோதரனின் பி.நாளுக்கு செய்த Quilling Card.
****************************************************                       


07/03/2014

வந்துவிட்டதா வசந்தம்!!!!

வெயில் வெளிச்சம் ......  இந்த பெப்ரவரி மாதம் ஸ்னோ இல்லாத மாதமாகிவிட்டது. கடந்த வாரம்  என்றுமில்லாதவாறு வெயில்,வெளிச்சம். இந்த வாரமும்  நல்ல காலநிலை. இன்றிலிருந்து 10/20 டிகிரி தொடர்ந்து 5நாட்களுக்கு. ஆனாலும் எத்தனை டிகிரி என்றாலும் குளிர்தான். ஏனெனில் இன்னமும் குளிர்காலம் முடியவில்லை. ஆச்சரியமான காலநிலை. இங்கு காலநிலை மிகமிக முக்கியமானது. இதே நிலையில்தான் முழுவாரமும் இருந்தது. வார இறுதியில் மட்டும் கொஞ்சம் மழை.இந்த வாரஇறுதி நல்ல வெய்யில். இப்ப படங்கள் 
இன்று எடுத்தவை.பலூன் படம் மாலை 4.30 மணியளவில்.  
       காலை 6.30 மணியளவு ...

மதியவேளை 
                  மாலையில்......
 பக்கத்து வீட்டு(காரரின் )ச்செல்லங்கள்.
*************************************
Sonnige 20 Grad! Am Wochenende wird es richtig warm!!!
Sunny 20 degrees! On weekends it gets really hot!!!
ஜெர்மன் பத்திரிகைகளில் முக்கிய இடம்பிடித்த செய்திகளில் இதுவும் ஒன்று (நாளையும், நாளை மறுதினமும் இங்கு நல்ல வெய்யில்.)
 *************************************
  *******************************************************
 எப்படித்தான் குளிரைச்சமாளிக்கிறீங்களோ ???
          இப்படித்தான் சமாளிக்கிறோம்.!!!!!!!!!!
            *******************************************************





 
Copyright பிரியசகி