RSS

15/05/2015

பூப்பூவா பூத்திருக்கு.......

வசந்த காலம் வந்து, (அது வந்து மாதம் 2ஆகுதே என நினைபவர்களுக்கு பதில் கடேஏஏசியில்) மரத்தில் இலைகள் துளிர்விட,  நானும் இனி பூச்செடிகள் புதிதா வாங்கி வைக்கலாமே என எண்ணினேன்.!!!
ஒருநாள் காலையில் மார்க்கெட் போய் இந்த பூச்செடிகளை 
                                  எல்லாம்
                             ஒவ்வொன்றாக
                                   
                  பார்த்து வாங்கிக்கொண்டு






வந்து வளர்க்க ஆசைதான்.ஆனால் எல்லா வகை பூச்செடிகளும் வாங்க அனுமதியில்லை. வாங்கினாலும் அவைகளை தொட்டியில்தான் வைக்கவேணும். என் கணவருக்கு தோட்டத்தில் புல் வளர்த்து, அதை வெட்டவேணும். இங்கு அதிகமானோர்  காணியிருந்தா புல் வளர்த்து வெட்டுவது ஒரு பொழுதுபோக்கு. அதுவும் ஒரு அழகுதான். பாருங்க வெட்டினபின் (நேற்று வெட்டியபின் எடுத்தது) தோட்டம் எவ்வளவு அழகாயிருக்கு. பறவைகளும் வருவாங்க.
ஒரு சில பூச்செடிகள் மட்டுமே வாங்கி வைச்சிருக்கேன்.  விரும்பிய செடிகளை படம் மட்டுமே எடுத்து வந்தேன்.
      **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **
இந்த ஆர்க்கிட்  பூக்கள் ஏற்கனவே என் வீட்டில் இருப்பவை.  
இவைகளை பராமரிப்பது சுலபம். அதிகம் மெனக்கெட
தேவையில்லை. சரியான முறையில் பராமரித்தால் பூக்கள் நிறையப்பூக்கும்.
   இவை என் வீட்டு வாசமில்லா மலர்கள் (காகிதப்பூக்கள்.)


**  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **  **
இங்கு ஏப்ரல் மாதம் இரவில் குளிர். அடுத்து அடைமழை. காலநிலை சரியில்லாததால் சில செடிகள்,மரங்கள் பட்டுவிட்டது வேறு. மே மாதம் ஆரம்பித்தபின்பு தான் மரங்களில் இலைகள், பூக்கள் பார்க்க அழகாக இருக்கு. இப்போ இந்த வாரம் நல்ல காலநிலை. ஆனாலும் அப்பவே பூச்செடிகளை வாங்கி வந்து, வீட்டினுள் வைத்து பாதுகாத்து, இப்போ வெளியில் வைத்தாயிற்று. ஆனா இவையல்ல. வேறு செடிகள்.....!!!!
                                                                         
 
Copyright பிரியசகி